கோவை, ஜன. 3 – குடியுரிமை திருத்த சட்டம் - 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்பப்பெற வலியு றுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்ட மைப்பு மற்றும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆகியோர் கோவை யில் வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வரு கிறது. மாணவர்கள், அரசியல் கட்சி யினர், இஸ்லாமிய அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் தீவி ரமான போராட்டங்களை முன்னெ டுத்து வருகின்றனர். இதன் ஒரு பகு தியாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் தமிழகம் முழுவ தும் வெள்ளியன்று மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவ தாக முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் ,மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகி யவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கு, எனவும் மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால் நாட்டு மக்களை பிளவுபடுத்தும் மத்திய அரசின் சட்டங்களை அனும தியோம் என்று முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து வழக்கறிஞர் சங்க தலைவர் நந்தகுமார் கூறுகை யில்,மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த குடியுரிமை திருத்த சட்டம் அரசியல் சானத்திற்கு விரோதமானது. நான் இந்திய குடிமகன் என்பதை நானே ஆதாரங்களை கொண்டு உறுதிப்படுத்த வேண்டும் என்பது ஆபத்தானது. இந்த சட்டத்தால் ஏழை, எளிய மக்கள் நாட்டிலிருந்து வெளி யேற்றப்படுவர். ஆகவே, மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்ப பெற வேண் டும் என தெரிவித்தார். இதேபோல்,கோவை மரக்க டையில் தக்னி அஹ்லே சுன்னத் வல் ஜமாஅத் சார்பாக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தாருஸ்ஸலாம் சுன்னத் ஜமாத், அஹ்லே ஹதீஸ் மஸ்ஜித், 5 கார்னர், கேரளா முஸ்லிம் ஜமாத், மஸ்ஜிதுல் ஹீதா சுன்னத் ஜமாத் இமாமபாடா, பட்டேல் முஹல்லாஹ் சுன்னத் ஜமாத் ஆகிய அமைப்புகள் சார்பில் நடத்தப் பட்டது. இதில் நூற்றுக்கணக்கா னோர் பங்கேற்று சிஏஏ, என்ஆர்சி ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகள் மற்றும் தேசிய கொடி களை ஏந்தி கைகோர்த்து நின்றனர்.