tamilnadu

img

அரூர் அருகே தடுப்புச் சுவரால் ஏற்படும் விபத்து

தருமபுரி, ஜூலை 9- அரூர்-திருவண்ணாமலை சாலை யிலுள்ள தடுப்புச் சுவரால் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியு றுத்தியுள்ளனர். தீர்த்தமலை வழியாக செல்லும் அரூர்-திருவண்ணாமலை சாலையில் செல்லம்பட்டி, பொய்யப்பட்டி, டி. ஆண்டியூர் உள்ளிட்ட இடங்களில் தார் சாலையின் மையப் பகுதிக ளில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட் டுள்ளன. இந்த தடுப்புச் சுவர்கள் தார் சாலையின் வளைவான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று அல் லது நான்கு வழிச்சாலைகள் சேரும் இடத்தில் தடுப்புச் சுவர் இருந்தால் வாகன ஓட்டிகள் மெதுவாகவும், சாலையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு சாலைக்கு பிரிந்து செல்வ தற்கு ஏதுவாக இருக்கும். ஆனால், வளைவான பகுதியில் சாலையின் மையப்பகுதியில் தடுப்புச் சுவர்கள் இருப்பதால், தொலைதூர பகுதியில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு தடுப்புச் சுவர்கள் இருப் பது தெரிவதில்லை. அதேபோல், தடுப்புச் சுவர்களின் அருகில் எதிரொளிப்பான்கள், தக வல்கள் பலகைகள் ஏதுமில்லை. இத னால், இரவு நேரங்களில் வேகமாக வரும் கார், லாரி, பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இந்த தடுப் புச் சுவரில் மோதுதி விபத்துகள் நேரிடுகின்றன. எனவே, வளைவான பகுதிகளில் தார் சாலையில் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் இடங்களை நெடுஞ் சாலை மற்றும் போக்குவரத்து துறை யினர் இணைந்து ஆய்வு நடத் வேண் டும். அதன் பிறகே தடுப்புச் சுவர்களை அமைக்க வேண்டும். அதேபோல், தார் சாலையின் வளைவான பகுதிகளில் சாலையை கூடுதலாக அகலப்ப டுத்த வேண்டும். விபத்துகள் அடிக் கடி நேரிடும் பகுதிகளில் மிகச்சிறிய அளவிலான வேகத்தடைகள், எதிரொளிப்பான்களை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைத்துறையிடம் வலியு றுத்தியுள்ளனர்.