tamilnadu

img

அறிவியல் இயக்கம் சார்பில் கல்வி வாசிப்பு முகாம்

புதுக்கோட்டை செப்.20-  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கல்வியாளர் பாவ்லோ பிரைரேவின் பிறந்தநாளையொட்டி விழிப்புணர்வுக்கான கல்வி வாசிப்பு முகாம் வியாழக்கி ழமையன்று நடைபெற்றது. முகாமிற்கு மாவட்டத் தலைவர் க.சதாசிவம் தலைமை வகித்தார்.   மாவட்ட துணைத்தலைவர் அ.மணவாளன் தொடக்கவுரையாற்றினார். அவர் பேசுகையில்,  ஆட்சியாளர்கள் புதிய தேசிய கல்விக்கொள்கையை அமுல்படுத்தத் துடிக்கும் இவ்வேளையில் இத்தகைய வாசிப்பு முகாம்கள் மிகவும் அவசியத் தேவையாகிறது என்றார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை விஞ்ஞாணி ரா.ராஜ்குமார் பாலோ பிரைரேயின் வாழ்க்கை வரலாற்றில் சந்தித்த சவால்களையும், கல்வி, முதியோர் கல்வி போன்றவற்றிற்கு செய்த பணிகளையும் தொகுத்து பேசினார். வாசிப்பு மற்றும் விவாதத்தில் எம்.ராஜாங்கம், எம்.பழனிச்சாமி, சி.N~hபா, சை.மஸ்தான் பகுருதீன், கே.ஜெயராம், அறிவியல் இயக்க இணைச்செயலாளர் விமலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமை அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் ஒருங்கிணைத்தார். முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் ம.வீரமுத்து வரவேற்க, ஏசுதாஸ் நன்றி கூறினார்.