தருமபுரி, நவ. 19- சிவாடியில் இந்துஸ்தான் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலை யம் அமைப்பதை கைவிடக்கோரி செவ்வாயன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் விவ சாயிகள் மனு அளித்தனர். இம்மனுவில் கூறியிருப்பதா வது, தெலுங்கானா மாநிலம், விஜய வாடா மாவட்டம் கொண்டப்பள்ளி கிராமத்தில் இருந்து 697 கி.மீ., குழாய் மூலம் பெட்ரோலிய எண் ணெய்யை கிருஷ்ணகிரி மாவட் டம் வழியாக தருமபுரி மாவட்டம், நல் லம்பள்ளி வட்டத்திலுள்ள சிவாடி கிராமத்தில் இந்துஸ்தான் பெட் ரோலியம் கார்ப்பரேசன் (லிமிட் டேட்) பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவுசெய் துள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.1,813 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய் துள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலை யத்திற்கு சிவாடி கிராமத்தில் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தும் வருகின்றனர். இந்நிறுவனம் கையகப்படுத் தப்பட உள்ள நிலம் 150க்கு மேற் பட்ட குடும்பங்களுக்கு சொந்தமா னது. இந்த குடும்பங்களில் 80 சத விகிதம் பேர் தலித்துகள். இம்மக் கள் பல தலைமுறைகளாக இங்கு விவசாயம் செய்து வருகின்றனர். நஞ்சை, புஞ்சையும் கலந்த இந்நி லத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை உள்ளிட்ட இதர மரங்களும் உள்ளன. இங்கு குடியிருப்புகளும் உள்ளன. இப்படிப்பட்ட நிலத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ப ரேசன் நிறுவனம் எண்ணெய் சுத் திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவை கைவிட வேண்டும் என அம்மனுவில் தெரி வித்திருந்தனர்.