tamilnadu

img

நீலகிரி மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்தான ஆய்வு

மாவட்ட ஆட்சியர் மேற்பார்வை  

நீலகிரி, டிச.18 - நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியுள்ள தாவது, புறமணவயல் பகுதியில் கூடலூர் நகராட்சியின் சார்பில் அனைவருக்கு வீடு கட்டும் திட்டத்தின்கீழ், தலா ஒரு வீட் டிற்கு ரூ 2.10 லட்சம் வீதம் ரூ.94.50 லட் சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 45 வீடுக ளையும், மார்த்தோமா நகர் பகுதியில் ரூ.50.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 24 வீடு களையும், கோடமுலா பகுதியில் ரூ.1.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 62 வீடு களையும், ஆலூர் பகுதியில் ரூ.25.2 லட் சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 22 வீடு களையும், கொத்தலகொள்ளி பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் ரூ.30.00 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 12 வீடுகள் ஆக மொத்தம் ரூ.3.30 கோடி மதிப்பில் கட்டப் பட்டு வரும் 165 வீடுகளை மாவட்ட ஆட்சி யர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண் டார். இதனை தொடர்ந்து கோடமுலா ஆரம்ப பள்ளி மற்றும் கொத்தலகொள்ளி அங்கன் வாடி மையத்தில் குடிநீர் வசதி, கழிப்பிடவசதி, உட்கட்டமைப்பு வசதிகளையும், சமையற் கூடத்தினையும் மற்றும் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டிருந்த மதிய உணவின் தரத்தி னையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் கணேஷ், கூடலூர் வட்டாட்சியர் சங்கீத ராணி, நகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.