திருப்பூர், ஜன. 17 - திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினரும், கைத்தறி மற்றும் உள்ளாட்சி ஊழியர் சங்கங்களின் செயலாள ராக செயல்பட்டவரும், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவரு மான கே.பொன்னுசாமியின் எட்டாம் ஆண்டு நினைவு தினம் வெள்ளியன்று கடைப்பிடிக்கப் பட்டது. திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கே.பொன்னுசாமியின் பணிகளை கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ் நினைவு கூர்ந்து உரையாற்றினார். நிகழ்வில் பங்கேற்றோர் கே.பொன்னு சாமியின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் பி.முருகேசன், வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன், மாந கரக்குழு உறுப்பினர்கள் பி.ஆர்.கணேசன், ஒய்.அன்பு மற்றும் கே.பொன்னுசாமியின் மகன் பி.பாலகுமாரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல் நெசவாளர் காலனி பகுதியிலும் கே.பொன்னுசாமியின் உருவப்படம் வைத்து மலர் தூவி நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்தப் பட்டது. இதில் இப்பகுதி கட்சி அணியினர் திரளாகப் பங்கேற்ற னர்.