tamilnadu

img

சென்னையில் இருந்து கோவை வந்த நபருக்கு கோவிட்-19 பாதிப்பு

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த நபருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி, சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து விமானம் மூலம் 360 பேர் நேற்று கோவை வந்தடைந்தனர். அனைத்து பயணிகளுக்கும் கோவிட்19 தொற்றுக்கான பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 300 பேருக்கு தொற்று இல்லை என்றும், 24 வயதுடைய நபர் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் கோவைக்கு வந்துள்ளார். அவர் தற்போது இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 3 வாரங்களாக கோவையில், கோவிட்-19 தொற்று எதுவும் காணப்படாத நிலையில், தற்போது சென்னையில் இருந்து வந்த ஒருவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.