சீனாவில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் தென்கிழக்கு பகுதியில் குயிஸ்ஹோ மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்துக்குட்பட்ட லியு பன்ஷுய் நகரில் உள்ள மலை கிராமம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் அதிகமானவர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை (ஜூலை 23) நள்ளிரவு இந்த கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 21 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலச்சரிவினால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.