மும்பை:
மும்பையிலிருந்து 70 கி.மீ., ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாநிலத்தின் கொங்கன் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கித் தவிக்கின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்ற ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கு மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தின் பதான்தெஹ்ஸில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள இரு இடங்களில்20 பேர் சிக்கியுள்ளதாக என்று சதாரா புறநகர் காவல்துறைகண்காணிப்பாளர் அஜய் குமார் பன்சால் தெரிவித்துள்ளார். மும்பையை அடுத்துள்ள மகாபலேஷ்வரில் வியாழக்கிழமை காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 480 மி.மீ மழை பெய்துள்ளது. இதற்கு முன்னர் மகாபலேஷ்வரில், 1977 ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி 439.8 மி.மீ. மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.