சிதம்பரம்:
புதிய கல்விக்கொள்கை பன்முகத் தன்மையைச் சீரழித்து விடும் என்றும் அக்கொள்கையை முழுவதும் ரத்து செய்யவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சிதம்பரத்தில் திங்களன்று (ஆக.3) அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக முதலமைச்சர் மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் ஏற்கமாட்டோம் என அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாகக் கூறினார். தமிழகத்திலுள்ள மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் தேசிய கல்விக் கொள்கையில் பல்வேறு அம்சங்களைச் சுட்டிக்காட்டி அதனை முழுவதுமாக நிராகரிக்க வேண்டும் என முதலமைச்சருக்கு கடிதம் மூலமாக வலியுறுத்தினோம். அதனடிப்படையில் அவர் அறிவித்துள்ளது வரவேற்கக்கூடியது.
தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் தேசிய கல்விக் கொள் கையை நிராகரிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர். 3,5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வைக் கொண்டு வந்துள்ளனர். இது நமது கல்வி கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டும் நடவடிக்கையாக உள்ளது.கல்வி என்பது மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் பொதுப் பட்டியலில் இருப்பதாகும். அதனை தற்போது மத்திய அரசு மட்டுமே தீர்மானிக்கக்கூடியதாக இந்த புதிய கொள்கை உள்ளது. மாநில அரசின் கல்விக் கொள்கை அறவே நிராகரிக் கப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான கல்வி கொள்கை ஏற்புடையதல்ல, பல கலாச்சாரம், பலமொழிகள், பல வரலாற்றுப் பின்னணி கொண்ட நமது சமுதாயத்தில் இந்த புதிய கல்விக் கொள்கை பன்முகத் தன்மையைச் சீரழித்து மாநில உரிமையைப் பறிக்கும் செயலாக உள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறையும்போது 10 பள்ளிகளை ஒன்றாக இணைத்து வளாகம் அமைத்து அதனைத் தனியாரின் கட்டுப்பாட்டில் விடுவது என் பது அரசு பள்ளிக்கூடங்களிலிருந்து கல்வியை ஒழித்துக் கட்டி தனியாரிடம் ஒப்படைக்கும் செயலாகும். ஏற்கனவே தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை ஒழிக்கும் செயல்கள் அரங்கேறி வருகிறது. புதிய கல்விக் கொள்கையில் இட ஒதுக்கீடு பற்றி குறிப்பிடவில்லை. தமிழக அரசு அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து ஒட்டுமொத்தமாக புதிய கல்விக் கொள்கையை நிராகரிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். இந்த விஷயத்தில் தமிழக அரசு இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கக்கூடாது.
இறந்தால்தான் இ.பாஸ் தருவீர்களா?
ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக் கப்பட்டு உள்ள நிலையில் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் வாங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதால் மக்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் எளிதாக இ பாஸ் கிடைக்கிறது. எனவே இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. தாயின் உடல்நிலை மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கும் போது பார்ப்பதற்கு இ பாஸ் அனுமதி கேட்டால் இறந்தால்தான் அனுமதி என்றால் எந்த விதத்தில் நியாயம் என அவர் கேள்வி எழுப்பினார். எனவே தமிழகத்தில் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்.அதேநேரத்தில் வெளி மாவட்டத்திலிருந்து வருபவர்களுக்கு சோதனை எடுத்து அனுமதிக்கலாம், கண்காணிப் பதைத் தீவிரப்படுத்தலாம். ஞாயிற் றுக்கிழமை மட்டும் ஊரடங்கு என்பது நோய்த்தொற்றை அதிகப்படுத்த வாய்ப்பாக உள்ளது. ஞாயிறு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை அன்று அனைத்து கடைகளிலும் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் நோய்த் தொற்று ஏற்பட அரசே வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. எனவே ஞாயிற் றுக்கிழமை தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு என்பதை ரத்து செய்ய வேண்டும்.
பொது போக்குவரத்து
பொது போக்குவரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்க வேண்டும். இந்த மாதம் 25 தேதி ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக பொதுமக்களுக்கு நிவாரணம் கொடுங் கள். இல்லையேல் ஊரடங்கை ரத்து செய்யுங்கள். எதையும் செய்யாமல் ஊரடங்கை மட்டுமே அமல்படுத்துவோம் என்றால் மார்க்சிஸ்ட் கட்சி தமிழகத்தில் பெரிய அளவில் போராட் டத்தை முன்னெடுக்கும் என்றார். பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் முத்து ஆகியோர் உடன் இருந்தனர்.