tamilnadu

img

சகோதரத்துவ சிந்தனையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.... கே.பாலகிருஷ்ணன் ஓண வாழ்த்துச் செய்தி

பெரும் தொற்று பரவலை வெற்றிகரமாக எதிர்கொண்டு மக்களை பாதுகாக்கும் உத்வேகத்துடன், பிணி தீர்ப்பதும், பசி தீர்ப்பதுமே எமது முதன்மைக் கடமை என்ற முழக்கத்துடன் நவகேரளத்தை வழிநடத்தி வரும் தோழர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுஜனநாயக முன்னணி ஆட்சி, இந்தாண்டு ஓணம் பண்டிகையையும் கேரள மக்களின் மனம் குளிரச் செய்யும் வகையிலான பண்டிகையாக மாற்றியிருக்கிறது. சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உயர்த்திப் பிடிப்பதே ஓணம் விழாவின் அடிப்படை சிந்தனையாகும். இந்த சிந்தனையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம். ஓணம் திருவிழாவையொட்டி தீக்கதிர் நாளிதழ் வெளியிடும் சிறப்பிதழ் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன். 

கே.பாலகிருஷ்ணன்,தமிழ்நாடு மாநிலச் செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சென்னை