tamilnadu

பெட்ரோல்-டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படுமா?

சென்னை, ஜூலை 10 - பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை  குறைப்பதன் மூலம் லிட்டருக்கு 10 ரூபாய் வரை விலையை குறைக்க முடி யும். அதனை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் வலியுறுத்தப்பட்டது. வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை மானியம் மீதான விவாதம் செவ் வாயன்று (ஜூலை 9) பேரவையில் நடைபெற்றது.
மைதீன்கான் (திமுக): ஜிஎஸ்டி-யால் வணிகர்கள் பாதிக்கப்பட்டு வருவாயை இழந்து, வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.
வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி: ஜிஎஸ்டியால் வணிகர்களுக்கு பாதிப்பில்லை. ஜிஎஸ்டி வசூலில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது.
மைதீன்கான்: ஜிஎஸ்டி-யில்  ஈரப்புளிக்கு வரியில்லை. காய்ந்த  புளிக்கு 5 விழுக்காடு வரிவிதிக்கப்படு கிறது. எது ஈரப்புளி என்று அதிகாரி களால் பகுத்துக்கூற முடியவில்லை. பொட்டுக்கடலைக்கு 5 விழுக்காடு விதிக்கப்படுகிறது. வீட்டில் செய்யும் பிஸ்கெட்டுக்கும், பிரிட்டானியா போன்ற நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பிஸ்கெட்டுக்கும் ஒரே வரி விதிக்கப்படுகிறது. சீனி மிட்டாய்க்கும் 12 விழுக்காடு, கேட்பரிஸ் சாக் லேட்டுக்கும் 12 விழுக்காடு என்பதை  எப்படி ஏற்க முடியும்? நோயாளி களுக்கான பிரெட்டுக்கு 5 விழுக்காடு வரி  விதிக்கப்படுகிறது. சுதேசி பொருட்க ளுக்கும், கார்ப்பரேட் உற்பத்தி செய்யும்  பொருளுக்கும் ஒரே வரி என்பது சரி யல்ல. இவற்றையெல்லாம் ரத்து செய்ய வேண்டும்.

அமைச்சர் டி.ஜெயக்குமார்: 69 பொருட்களுக்கும், 8 சேவைக்கும் விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்படும். ஜாப் ஒர்க்குகளுக்கு 18 விழுக்காடு வரி, ஜவுளி 
துணி வகைகள், பட்டாசு போன்றவற்றிற்கு வரிகுறைப்பு, வரிவிலக்கு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கே.வி.சேகர்: தமிழகத்தில் பெட் ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் லிட்டருக்கு 10 ரூபாய் வரை குறைக்க முடியும். ஜிஎஸ்டி மூலம் தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து எவ்வளவு வர வேண்டி உள்ளது.
அமைச்சர் ஜெயக்குமார்: ஜிஎஸ்டி வாயிலாக 4 ஆயிரத்து 500 கோடி ரூபாயும், மாநிலத்திற்கு வழங்க வேண்டிய இழப்பீடாக ஆயிரம் கோடி ரூபாயும் என 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வர வேண்டி உள்ளது.
துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்: 2018-19ம் நிதியாண்டில் தற்காலிகமாக, இடைக்கால நிதியாக 4 ஆயிரத்து 842 கோடி ரூபாய் வந் துள்ளது. வழக்கமான தீர்வையாக 12 ஆயிரத்து 425 கோடி ரூபாய் கிடைக்கப் பெற்றுள்ளது.