சென்னை:
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறித்து மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச் சர் சுப்பிரமணியன் கூறியதாவது:-கடந்த 2010 டிசம்பர் 27 ஆம் தேதி மருத்துவத்துக்கு நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தியது இந்திய மருத்துவக் கழகம். 2011 ஜனவரி 6 ஆம் தேதி தமிழகத்தில் நீட் தேர்வுக்கு அனுமதி வழங் கப்பட்டது. அப்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி இருந்தது. அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு வந்தது; மேலும் நீட் தேர்வுக்கான பயிற்சி அரசுப் பள்ளிகளில் அதிமுக அரசின் தான் தொடங்கியது. தற்போது வரை நீட் தேர்வு நடைமுறையில் இருப்பதால் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதிமுக அரசு தொடங்கிய பயிற்சி இப் போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.திமுக தேர்தல் அறிக்கை யில் கூறியபடி நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அதற் கான நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை அரசு அமைத்துள்ளது. இதுவரை அந்த குழு 4 கூட்டங் களை நடத்தியுள்ளது. ஒரு மாதத்திற்குள் அவர்கள் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். பிரதமரிடமும் நேரடியாக சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், நீட் தேர்வுக் கான பயிற்சி தற்போது தொடங்கப்பட்டதுபோல எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் அறிக்கை விடுகிறார். இது குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.