சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த பழங் குடியின நல ஆர்வலரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ஸ்டான் சுவாமியின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள் ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளது வருமாறு:-
பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளருமான ஸ்டான் சுவாமி, மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். ஆழ்ந்த இரங்கல். அடித்தட்டு மக்களுக்காகப் போராடிய அவருக்கு நேர்ந்த துயரம் இனி எவருக்கும் நிகழக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.சிறைக்காவலில் காலமான பழங்குடி மக்களின் வாழ்வாதார பாதுகாவலராகவும், அவர்களது உரிமைகளுக்கான சமூகப் போராளியுமான ஸ்டான் சுவாமிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கி. வீரமணி: மனித உரிமைப் போராளியின் முதுமையை அலட்சியப்படுத்தி - சிறையில் அடைத்து நோயுற்றும் தக்க சிகிச்சை உரிய காலத்தில் தராத நிலையில் மரணமடைந்தது பாசிசமும், அடக்குமுறையும் அவர் வாழ்வைப் பறித்தது என்பதே உண்மையாகும்.வைகோ: கொடிய கொரோனா தொற்றுக்கு ஆளாகி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையிலும் அவருக்கு பிணை வழங்க என்.ஐ.ஏ. எதிர்ப்பு தெரிவித்த பாஜக அரசின் கொடுமையான அடக்குமுறை ஸ்டான் சுவாமி உயிரையே பறித்து
விட்டது. இந்தக் கொடூர மரணத் திற்கு ஒன்றிய பாஜக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.மாற்றுக் கருத்துக்களையும், விமர்சனங்களையும் அரசியல் ரீதியாக எதிர்கொள்ள திராணியற்று, அடக்குமுறை வழியினை கடைபிடித்து, அறிவுத்துறையினரை அழித்தொழித்து வரும் ஆர்எஸ்எஸ், பாஜகவின் பாசிச வகைப்பட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஜவாஹிருல்லா: உழைப் பாளி மக்களுக்காக குரல் கொடுத்த சுயநலமில்லாத போராளி அருட்தந்தை ஸ்டான் சுவாமி. இந்தியாவின் ஜனநாயகத்திற்காகப் போராடும் போராளிகளுக்கு இவர் ஒரு சிறந்த முன்னோடி. இத்தகைய உன்னத மனிதரை சிறையில் அடைத்து கொலை தான் செய் துள்ளார்கள். இதற்கு முழுப் பொறுப்பு மனிதாபிமானமில்லாத மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான்.இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.