tamilnadu

வெள்ளை அறிக்கை: தலைவர்கள் கருத்து....

 சென்னை:
அதிமுக அரசின் பத்தாண்டு கால ஆட்சியின் நிதிநிலை பற்றி நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன் தாக்கல் செய்த ‘வெள்ளை அறிக்கை’ குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஓ.பன்னீசெல்வம் (அதிமுக): திமுக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்து பேச வேண்டிய இடத்தில் பதில் சொல்வோம்.

கே.எஸ்.அழகிரி (காங்.): நிதிநிலைமை எப்படி இருந்தாலும், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றும் என்று நிதியமைச்சர் கூறியது வரவேற்கத்தக்கது.

கி.வீரமணி(தி.க): தமிழ்நாடு அரசு எப்படி அறிவியல்பூர்வமான செயல்திறனோடு செயல்பட்டு வருகிறது என்பதற்கு இந்த வெள்ளை அறிக்கை வெளியீடு இந்தியாவின் இதர மாநிலங்களுக்கும், ஒன்றிய அரசுக்குமேகூட ஒரு வழிகாட்டும் எடுத்துக்காட்டா கும்.நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல்.என்ற குறள்மொழிக்கு ஒப்பாகும்.

அய்ந்தாண்டுகளில், கடந்த ஏழாண்டுகளின் கீழிறக்கத்தை சரி செய்வோம் என்ற உறுதி வரவேற்கத்தக்கது - முதலமைச்சரையும், நிதியமைச்சரையும் பாராட்டுகிறோம்.

தொல். திருமாவளவன் (விசிக): தமிழ்நாட்டின் நிதிநிலைமை கவலைக்குரியதாக இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் சரியாக நிதி மேலாண்மை திறம்பட  கையாளப் படாததால் கடன்சுமை பெருகியது மட்டுமின்றி, வரி வருவாயின் பெரும்பகுதி வட்டி செலுத்துவதற்கே விரயமாகியுள்ளது. அதனால் வளர்ச்சித் திட்டங்களுக்கு முதலீடு செய்ய முடியாமல் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சிப் பாதையிலிருந்து நழுவி அதலபாதாளத்தில் சரிந்து வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இத்தகைய இக்கட்டான நெருக்கடியிலிருந்து தமிழ்நாட்டை மீட்டு மீண் டும் அதனை வளர்ச்சியை நோக்கி கொண்டுபோய் சேர்க்கும் வலிமை திமுக அரசுக்கு உண்டு என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நம்புகிறது.

இரா.முத்தரசன் (சிபிஐ): அரசு நிர்வாகத்தை வெளிப்படைத் தன்மையோடும், மக்கள் ஆதரவோடும் நடத்தும் நல்ல நோக் கத்தோடு வெள்ளையறிக்கை வெளியிட்டிருப்பதை வரவேற்கிறோம்.பேரா.ஜவாஹிருல்லா (மமக): பொருளாதார நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்து முக்கிய தரவுகளோடு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த சரிவு சரி செய்யக்கூடியது என்று அறிக்கையின் முடிவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

அன்புமணி (பாமக): வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ள சில கருத்துகள் ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கக்கூடிய அறிவிப்புகளுக்கு முன்னோட் டமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. மின்கட்டணம், பேருந்து கட்டணம், சொத்துவரி உள்ளிட்டவற்றை உயர்த்துவதற்கான கருவியாக வெள்ளை அறிக்கையைப் பயன்படுத்தக்கூடாது.