tamilnadu

img

தமிழ்நாட்டில் டிச.16,17-ஆம் தேதி ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள் என்னென்ன?

டிச.16,17-ஆம் தேதி தமிழ்நாட்டில் சில மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் மற்றும் கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டும் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ள மாவட்டங்கள்:

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் டிச.16,17-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மஞ்சள் அலர்ட் விடுத்துள்ள மாவட்டங்கள்!

தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் டிச.16,17-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.