tamilnadu

img

இந்தியாவில் கொரோனா உச்சம் பெறுவது எப்போது?

சென்னை:
இந்தியாவில் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் கோவிட் 19 தொற்று உச்சம் பெறும் என்று பிரபல பொது மருத்துவ நிபுணரும், இந்திய பொது சுகாதார நிறுவனத் தின் இயக்குனருமான பேராசிரியர் ஜி.வி.எஸ். மூர்த்தி கூறியுள்ளார்.

இந்தியாவில் ஒரே மாதிரியாக கொரோனா தொற்று உச்சம் தொடாது என்பதுதான் அவரது முக்கிய கணிப்பாக இருக்கிறது.ஏன் அப்படி என்றால் அதற்கு அவரிடம் தெளிவான பதில் இருக்கிறது, “ஒவ் வொரு மாநிலத்திலும், மக் கள் கொரோனா தொற்று நோய்க்கு ஆளானதின் அடிப்படையில் அவற்றுக் கென சொந்தப்பாதை உள்ளது. எனவே நாட்டில் கொரோனா தொற்று உச்சம், ஒரே சீராக இருக்கப்போவதில்லை” என்கிறார் அவர். இதற்கு அவர் உதாரணமாக பீகார் மாநிலத்தை காட்டுகிறார்.

“பீகார் மாநிலத்தை எடுத் துக்கொண்டால், மும்பை, தில்லி போன்ற நகரங்களில் இருந்து இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலமான பீகாருக்கு சென்றபிறகுதான் அங்கு தொற்று பரவல் அதிரடியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஒரு நபர் தனது குடும்பத்தில் உளள மற்றவர்களுக்கு தொற்று பரவலை ஏற்படுத்த சுமார் 10 முதல் 14 நாட்கள் வரை ஆகிறது. எனவே அதன்பின்னர் தான் புதிதாக பாதிப்பு அலை அலையாக ஏற்படுகிறது” என்பது பேராசிரியர் ஜி.வி.எஸ். மூர்த்தியின் கருத்து.
இதே போன்றுதான் ஜார்கண்டிலும். அங்கும் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பி வந்த பின் னரே பரவல் தொடங்கி இருக் கிறது, எனவே அங்கும் கொரோனா உச்சம் தொட நீண்ட காலம் ஆகும் என்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்றை கையாள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முக கவசம் அணிதல், கை கழுவுதல், தனி மனித இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று உரத்த குரலில் சொல்கிறார். மக்கள் அடர்த்தி நிறைந்த மாநிலங்களில் தீவிர நடவடிக்கைகள் வேண்டும் என்பது இவரது வலியுறுத்தலாக அமைந்திருக்கிறது.

ஜார்கண்ட், சத்தீஸ்கர், உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதி ஆகியவற்றில் கொரோனா தொற்று குறைவாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிய பிறகு பரவல் வேகம் எடுத்து இருக்கிறது என சுட்டிக்காட்டும் பேராசிரியர் ஜி.வி.எஸ். மூர்த்தி, இங்கெல்லாம் தொற்று உச்சம் தொட நீண்ட நாட் கள் ஆகும், அனேகமாக செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் மாதம் தான் உச்சம் தொடும்.