சென்னை, ஏப்.19-தமிழகத்தில் 45 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் கூறினார்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,“ தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலின்போது வாக்குச் சாவடிகளில் ஆங்காங்கே நடந்த அசம்பாவித சம்பவங்கள் தொடர் பாக அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருந்தோம். முடிவில் அவர்கள் கொடுக்கும் அறிக் கையை வைத்து அந்தந்த வாக்குச் சாவடிகளில் தேர்தல் சரியாக நடத்தப்பட்டுள்ளதா என்பதை முடிவு செய்வோம்” என்றார். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்க சிறப்பு முகாம் நடத்தினோம். சனி, ஞாயிற்றுக்கிழமை களில் 10 நாட்கள் முகாம் நடத்தி உள்ளோம். ஆனால் சிலர் வாக்காளர் பட்டியலை பார்க்காமல் கடைசி நேரத்திலும் இண்டர் நெட்டில் பார்த்தும், 1950 நம்பருக்கு போன் செய்து விசாரித்தும் ஓட்டு போட வந்துள்ளனர். முகவரி மாறி சென்றுள்ளதால் பலரது பெயர்கள் பட்டியலில் நீக்கப் பட்டுள்ளன. அதிக பெயர்கள் நீக்கப்பட்டுள்ள இடங்களில் ஆய்வு நடத்த சொல்லியிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பு இம் மாதம் 22 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். பறக்கும்படையினர் தேர்தல் நடக்கும் அந்தந்த மாவட்டங்களில் மட்டும் தான் சோதனை நடத்துவார்கள் எனவும் கூறினார்.
தருமபுரி மக்களவைத் தொகுதி நத்தமேடு, மோட்டார் குறிச்சி 4 வாக்குச்சாவடியில் பாமக-வினர் கேமராக்களை திருப்பி வைத்து, திமுக முகவர் களை விரட்டி விட்டு ஓட்டு போட் டார்கள். அங்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக வேட்பாளர் கோரிக்கை வைத்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “இதுகுறித்து ஒரு சில கட்சியினர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். செய்தித்தாள்களிலும் வந்துள்ளது. அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளேன்” என்றார்.கன்னியாகுமரியில் ஒரு பிரச் சனை தொடர்பாக புகார் வந்துள் ளது. அதற்கும் அறிக்கை கேட்டுள்ளோம். மேலும் தேர்தல் தொடர்பாக ஏதாவது புகார் வந்தாலும் மாவட்ட ஆட்சியர்களிடம் அறிக்கை கேட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புவோம். அதன் பிறகு இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.தமிழ்நாடு முழுவதும் எத்தனை இடங்களில் வாக்குகள் எண்ணப்படும் என்ற கேள்விக்கு, “45 இடங்களில் வாக்குகள் எண்ணப்படும். மின்னணு இயந்திரங்கள் அந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 24 மணிநேரமும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு இயந்திரங்கள் உள்ளே வைத்து பூட்டி வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பை அரசியல் கட்சியினர் கண்காணித்துக் கொண்டே இருக்க லாம். மே 23ஆம் தேதி ஓட்டுஎண்ணிக்கை நடைபெறும். அனைத்து மின்னணு இயந்தி ரங்களும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாகவும் சத்தியபிரத சாகு தெரிவித்தார்.