tamilnadu

img

போதிய வசதி இல்லாததால் வாக்காளர்கள், ஊழியர்கள் அவதி

சென்னை, ஏப். 18- சென்னையில் 3 மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் காவலர்கள் ஈடுபட்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்ட பேரவை தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வியாழனன்று (ஏப். 18) நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை என 3 மக்களவைத் தொகுதி மற்றும் பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஆணையம் அறிவித்தபடி ஏற்பாடுகள் இல்லை. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். ஆனால் பணியில் இருந்த அரசு ஊழியர்கள், தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினர் போதிய உணவு, குடிநீர், கழிவறையின்றி அவதிப்பட்டனர்.போதிய அளவு மின் விசிறி வசதி ஏற்படுத்தித் தரவில்லை.


பல இடங்களில் அரசுப் பள்ளிகளில் வாக்குச்சாவடி அமைத்திருந்ததால் மின்சார வசதிகளுக்கான கட்டமைப்பு இல்லை. வெயிலின் தாக் கத்தால் பெண் பணியாளர்கள் அவதிக்குள்ளாகினர்.குறிப்பாக மாற்றுத் திறனாளிகள் மற்றும் நடக்க இயலாத மூத்த குடிமக்களுக்கான தள்ளு வண்டி (வீல்சேர்) வசதி இல்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் வரும் வாக்குச் சாவடிக்கு ஒன்று என்ற வீதத்தில் தான் வீல்சேர் கொடுத்தனர். அதனை கையாள பணியாளர்கள் இல்லாததால் பயன்படுத்த முடியவில்லை என்றனர். வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே எடுத்துக்கொண்டு வாக்களிக்க பெரும்பாலானோர் வந்தனர். பூத்சிலிப் எனப்படும் வாக்குச் சீட்டுகள் வாக் காளர்களுக்கு அளிக்கப்படவில்லை. இதனால் அலைக் கழிக்கப்பட்ட வாக்காளர்கள் வெறுத்துப் போய் வாக்களிக்காமல் வீடு திரும்பிய அவலமும் நடைபெற்றது. வாக்களிப்பது ஒரு சவாலான விசயமாக இருந்தது என புதிய வாக்காளர்கள் சலிப்புடன் கூறினர்.


வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் சீல்வைக் கப்பட்டது. வட சென்னை மற்றும் பெரம்பூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ராணி மேரிக்கல்லூரிக்கும், மத்திய சென்னை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் லயோலோ கல்லூரிக்கும், தென்தென்னை தொகுதியில் பயன்படுத்தப் பட்ட இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகத் திற்கும் கொண்டு செல்லப் பட்டன. வாக்கு எண் ணிக்கை நடைபெறும் மே 23ஆம் தேதி வரை சுழற்சி முறையில் துணை ராணுவம் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.