tamilnadu

img

தமிழகத்தில் 6 கோடியே 26 லட்சம் வாக்காளர்கள்....

சென்னை:
தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு புதனன்று(ஜன.20) வெளியிட்டுள் ளார். அதன்படி மாநிலத்தின் மொத்த வாக்காளர் எண் ணிக்கை 6 கோடியே 26 லட் சத்து 74 ஆயிரத்து 446 ஆகும்.வரவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலுக்கான தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு புதன் கிழமை வெளியிட்டார். அதன்படி மாநிலத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6,26,74,446 ஆகும். அதில் ஆண்கள் 3,08,38,473 பேராகும். பெண்கள் 3,18,28,727 பேர். மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேராகும்.

சென்னையின் மொத்த வாக்காளர்களில், ஆண் களை விட பெண்களே அதிகமுள்ளனர். அதன்படி, சென் னையில் உள்ள 16 சட்டப் பேரவை தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையான 40,57,360 பேரில்  19,95,581 ஆண்கள். 20,60,698 பெண் கள். 1,081 மூன்றாம் பாலினத்தவராகும்.அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களை கொண்ட தொகுதியை சென்னை அருகே உள்ள சோழிங்கநல்லூர் தக்கவைத்துக் கொண்டது. இங்கு 6,94,845 வாக்காளர்கள் உள் ளனர்.  குறைந்த எண் ணிக்கை கொண்டது சென்னை துறைமுகம் தொகுதியாகும். இதன் மொத்த வாக்காளர் கள்  1,76,272 பேராகும்.

முன்னதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட திருத்தப் பணிகளுக்காக கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அதில் 21,82,120 விண்ணப்பங்கள் பெறப் பட்டு, வாக்காளர் பட்டியலில் 21,39,395 விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டன. மேலும் இறப்பு, இடமாற்றம், போலி வாக்காளர்கள் உள்ளிட்ட காரணத்தால் 5,09,307 வாக் காளர் பெயர்கள் நீக்கப் பட்டுள்ளன.