tamilnadu

img

முதல்வர் இல்லப் பாதுகாப்பு காவலருக்கு வைரஸ் தொற்று

சென்னை,மே 7- சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவருக்கு வைரஸ் நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விடு முறையில் சென்று உள்ளார். தற்போது அவ ருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் போது  இந்த நோய் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.
காவல்துறை மறுப்பு
முதல்வர் இல்லம் அருகே பணியாற்றிய பெண் காவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக வந்த செய்திக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை காவல் ஆணை யரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை பாதுகாப்பு காவல் பிரிவைச் (SCP) சேர்ந்த பெண் தலைமைக் காவலர் முதல்வர் இல்லப் பாதுகாப்புப் பணியில் ஈடு படுத்தப்படவில்லை. அவர் கிரீன்வேஸ் சாலையில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை பணியில் இருந்தார். அவருக்குப் பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தது என கூறப்பட்டுள்ளது.