சென்னை, டிச. 3 - பெஞ்சால் புயலால், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மேல் மழை பெய்து வாழ்வாதாரம் பாதித்த குடும்பங்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ள முதல்வர், வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழந்திருந்தால் தலா ரூ. 4 ஆயி ரமும், கோழி இறந்திருந்தால் தலா ரூ. 100 வழங்கப்படும்; எருது, பசுக் களுக்கு தலா ரூ. 37 ஆயிரத்து 500-ம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அமைச்சர்கள் - அதிகாரிகளுடன் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், விழுப்புரம், கள்ளக் குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வரும் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாயன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி வாயிலாகத் தொடர்பு கொண்டு தற்போதைய நிலையைக் கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து பெஞ்சால் புய லால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களுக்கான நிவா ரண உதவிகள் அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார்.
பயிர் இழப்புக்கு ரூ. 17,000 நிவாரணம்
“புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்; சேத மடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 10 ஆயிரம், முழுமை யாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை வழங்கப் படும்; மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாச னப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 17 ஆயிரம்; பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 22 ஆயிரத்து 500; மழையினால் பாதிக்கப் பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 8 ஆயிரத்து 500 வழங்கப்படும்.
கால்நடைகளுக்கு ரூ. 37 ஆயிரம்
எருது, பசு உள்ளிட்ட கால்நடை களின் உயிரிழப்புக்கு நிவாரணமாக ரூ. 37 ஆயிரத்து 500; வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ. 4,000; கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ. 100; அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங் களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வா தாரம் பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்கு, குடும்ப அட்டை அடிப்படை யில் நிவாரணமாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்” என அந்த அறிவிப்பில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
சான்றிதழ்கள் வழங்க முகாம்
மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றி தழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்த வர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கப்படவும்; மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ - மாணவியர்க்கு புதிய பாடப் புத்த கங்கள் மற்றும் நோட்டுப் புத்த கங்கள் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நிவாரணம் வழங்குவது தொடர்பாக தரு மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணா மலை ஆகிய மாவட்ட ஆட்சித் தலை வர்கள் தங்கள் மாவட்டங்களில் கடு மையாக பாதிக்கப்பட்ட பகுதி களின் விவரங்களை அரசுக்கு அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.