சென்னை:
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
நடப்பு கல்வியாண்டு முதலே அகிலஇந்திய ஒதுக்கீட்டில், 27 சதவீத ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கிட ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதை மாணவர், வாலிபர் சங்கங்கள் வரவேற்கிறோம்.நடப்பு கல்வியாண்டு முதலே மருத்துவம் மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டை பின்பற்ற வழிவகை செய்ய வேண்டும். இடஒதுக்கீட்டை வலியுறுத்தி 2020 ஆகஸ்ட் 17 அன்று தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயகவாலிபர் சங்கம் மற்றும் இந்தியமாணவர் சங்கம் இணைந்து போராட்டங்களை நடத்தின. இந்நிலையில் இதரபிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதமான இடஒதுக்கீடு வழங்கப்படும் என ஒன்றிய அமைச்சரவை முடிவெடுத்துள்ளதை வரவேற்கிறோம்.
இது கடந்த பல்லாண்டுகளாக நடத்தப்பட்டு வந்த சட்டப்போராட்ட த்திற்கும், ஒன்றுபட்ட போராட்டத்திற் கும் கிடைத்த வெற்றியாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறு வனங்களில் ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவீத ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் அந்தந்த மாநிலத்தில் உள்ளஇடஒதுக்கீடு கொள்கையை அமலாக்கிட தமிழகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதமான இடஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும்; தமிழகத்தில் அனைத்துப் பிரிவினருக்குமான 69சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றிய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் அமலாக்க வேண்டும். அனைத்து தனியார் கல்விநிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.