tamilnadu

மிக கனமழை பெய்யும்: வானிலை மையம்

சென்னை, ஏப்.25- வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப்பகுதிகளில் புயல் எச்சரிக்கை விடுக் கப்பட்டது. இதையடுத்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர், பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல்படையினருடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.

கடலுக்கு செல்ல வேண்டாம்!

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக வலு பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், 28 ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. 

‘ரெட் அலர்ட்’

தமிழகம் மற்றும் புதுவையில் அதி தீவிர கனமழைக்கு வாய்ப் புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. கன மழை பெய்யும் என்பதால் முன் எச்சரிக்கைக்காக ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது. சனிக் கிழமை உருவாகும் புயல் காரணமாக ஏப்ரல் 30, மே 1 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருக்கிறது.