விஏஓ அருணா படுகொலை! குற்றவாளிகளை கைது செய்ய தீஒமு வலியுறுத்தல்
அம்பத்தூர், ஜன. 3- திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கீரப்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரி அருணா சாதி மறுப்பு காதல் செய்ததால் படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி, திரு வள்ளூர் மாவட்டச் செயலாளர் கன்னியப்பன், வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராஜ்குமார், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஆபெல்பாபு, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் பி.பத்மாவதி ஆகியோர் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திலும், மாதவரத்தில் உள்ள துணை ஆணையர் பாலாஜியையும் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்டம், பழனி கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் சிவபாரதி. இவர் திரு வள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், திருப்பாலைவனம் பிர்கா பாக்கம் (ம) கணவன் துறை கிராம நிர்வாக அலுவலராக 2023ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார். பொன்னேரி வட்டம் அகரம் கிராமம் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் அருணா கோளூர் பிர்கா மாங்கோடு (ம) கீரப்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரியாக பணி செய்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டு களாக காதலித்து வந்துள்ளனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அருணாவின் குடும்பத்தி னர் எதிர்ப்பு தெரிவித்து, அருணா வை அடித்து வன்கொடுமை செய்துள்ளனர். அருணாவின் பெற்றோர் ரவி - ஜோதி, சகோதரர்கள் அரவிந்த், அஜித் ஆகியோர் அருணாவை பல முறைகளில் வன்கொடுமை செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி அருணாவின் பெற்றோர், சகோ தரர்கள் இணைந்து அருணாவின் கை, கால்களை கட்டிப்போட்டு, அடித்து வாயில் பூச்சிக்கொல்லி விஷத்தை ஊற்றி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இதில் மயக்கமடைந்த அருணா சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி ஜனவரி 1ஆம் தேதி காலை மரணமடைந்தார். வெவ்வேறு சமூகம் என்பதால் இவர்களின் காதலுக்கு அருணாவின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அருணாவின் மரணத்திற்கு அவரின் குடும்பத்தினர் காரணம் என்பதற்கு சாட்சியங்களாக அருணா சிவபாரதிக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளும், பேசிய உரை யாடலும் உறுதி செய்கின்றன. காவல்துறை சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளநிலை யில், அருணா தற்கொலை செய்து கொண்டார் என பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அருணாவின் காதலர் சிவபாரதி திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் இது தற்கொலை அல்ல, குடும்பத்தினரால் செய்யப்பட்ட படுகொலை என புகார் மனு அளித்துள்ளார். இதன் மீது காவல்துறை உடனடியாக விசாரணை செய்து இதை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். அருணா வின் சாதி ஆணவப் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் அருணா வின் தந்தை ரவி, தாயார் ஜோதி, சகோதரர்கள் அரவிந்த், அஜித் ஆகியோர் மீது சித்திரவதை மற்றும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். சிவபாரதிக்கு நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். உயிருக்கு அச்சமடைந்துள்ள சிவபாரதிக்கு தற்போது காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், மேலும் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையில் பணி செய்யும் அருணாவின் சகோதரர் அரவிந்த் இப்படுகொலையில் முக்கிய குற்றவாளி என்றும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட துணை ஆணையர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக பி.சுகந்தி தெரிவித்தார்.
