tamilnadu

img

கே.கே.நகர் அரசு மருத்துவமனையை 500 படுக்கை கொண்டதாக தரம் உயர்த்துக!

கே.கே.நகர் அரசு மருத்துவமனையை 500 படுக்கை கொண்டதாக தரம் உயர்த்துக!

சென்னை, ஜூலை 14 -  கே.கே.நகர் அரசு மருத்துவமனையை 500 படுக்கை கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரியுள்ளது. வாலிபர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதி 11வது மாநாடு ஞாயிறன்று (ஜூலை 13)  சூளைப்பள்ளத்தில் நடைபெற்றது. மாநாட்டில், நூறடி சாலை, கோயம்பேடு தேமுதிக அலுவலகம் அருகே நடை மேம்பாலம் அமைக்க வேண்டும், விருகை தொகுதியில் உள்ள அனைவருக்கும் குடி மனைப்பட்டா வழங்க வேண்டும்; தொகுதிக் குள் அரசு கல்லூரி அமைக்க வேண்டும், நெசப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு வாரம் முழுவதும் மருத்துவர் வருவதை உறுதிப்படுத்த வேண்டும், சூளைபள்ளத்தில் விடுபட்ட 15 தெருக்க ளில் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டிற்கு பகுதித்தலைவர் சுந்தர் ராஜ் தலைமை தாங்கினார். பகுதிக்குழு உறுப்பினர் சென்னல் பாரதி கொடி யேற்றினார். பகுதி துணைச் செயலாளர் அபினேஷ் வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை பகுதிக்குழு உறுப்பினர் ஆகாஷ் வாசித்தார். மாநாட்டை தொடங்கி வைத்து தென்சென்னை மாவட்ட பொரு ளாளர் எஸ்.திவாகர் பேசினார். வேலை அறிக்கையை பகுதிச் செயலா ளர் ஏ.ராஜ்குமாரும், வரவு செலவு அறிக் கையை துணைத் தலைவர் ஆர்.நிரஞ்சனா  ஆகியோர் சமர்ப்பித்தனர். மாவட்ட  செயலாளர் தீ.சந்துரு நிறைவுறையாற்றி னார். 13 பேர் கொண்ட பகுதிக்குழுவின் தலைவ ராக சுந்தர்ராஜ், செயலாளராக ஏ.ராஜ்குமார்,  பொருளாளராக சதீஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.