tamilnadu

img

‘கொடிய சட்டத்தை’ திரும்பப்பெறும் வரை ஓயமாட்டோம்: மு.க.ஸ்டாலின்

சென்னை:
‘கொடிய சட்டத்தை’ திரும்பப்பெறும் வரை ஓயமாட்டோம் என்று திமுகத் தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கைவிடுத்தார்.குடியுரிமைச் சட்டம் என்ற பெயரால், மக்களின் குடியுரிமையை பறித்து, அவர்களுக்கு குழிபறிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்த மத்திய பாஜக அரசையும் அதற்கு,தலையில் பாதங்களைத் தாங்கி அனுதினமும் அடிமைச் சேவகம் செய்யும் மாநில அதிமுக அரசையும் கண்டித்தும் திமுக. தோழமை கட்சிகள்மற்றும் பல்வேறு அமைப்புகள், தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்ட பேரணி சென்னை எழும்பூரில்தொடங்கி ராஜரத்தினம் ஸ்டேடியத்தை வந்தடைந்தது. 

அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஓர் அணியாய் அணி வகுத்து நின்ற தலைவர்கள் மத்திய அரசே-மோடி அரசே திரும்பப் பெறுதிரும்பப் பெறு குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு. எங்கள் ரத்தம் எங்கள் ரத்தம் இந்து, முஸ்லிம்,கிறித்துவர்கள் எல்லாம் எங்கள் ரத்தம், பிரிக் காதே பிரிக்காதே. ஒற்றுமையாய் வாழும் இந்தியர்களை திட்டம்போட்டு பிரிக்காதே; தூண்டாதே தூண்டாதே மதவெறியை தூண்டாதே; மறைக்காதே மறைக்காதே, இந்தியாவின் இறையாண்மையை காவிக்கொடியால் மறைக்காதே; உரிமைக்கொடு உரிமைக்கொடு, ஒட்டுமொத்த அகதிகளுக்கெல்லாம் இந்தியர் என்ற உரிமைக்கொடு; மாற்றாதே மாற்றாதே இந்திய நாடுசமத்துவ நாடு, இந்து நாடாக மாற்றாதே; வேண்டும்வேண்டும் சட்டம் வேண்டும். அனைவருக்கும் பொதுவான குடியுரிமைச் சட்டம் வேண்டும்; கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அதிமுகவை கண்டிக்கிறோம்; தமிழக அரசே தமிழக அரசேதுணிச்சல் இல்லா எடப்பாடி அரசே முஸ்லிம் மக்களுக்கு துரோகம் செய்த எடப்பாடி அரசே உடனடியாக பதவி விலகு; துணை போகாதே துணை போகாதே மத்திய அரசின் துரோகத்திற்கு துணைப்போகதே. கண்ணீர் துடைப்போம் கண்ணீர் துடைப்போம் இலங்கைத் தமிழர் கண்ணீர் துடைப்போம்; துணையாய் இருப்போம் துணையாய் இருப்போம் சிறுபான்மை மக்களுக்கு துணையாய் இருப்போம் என்று கோரிக்கைமுழுக்கமிட்டனர். 

பின்னர் உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி,பல்வேறு பொது அமைப்புகளின் அரவணைப் போடு, பொதுமக்களின் ஒத்துழைப்போடு, இந்தப்பேரணி சிறப்பாக நடைபெற்றிருக்கிறது. இது பேரணி அல்ல; போரணி” என்றார். இந்தப் ‘பேரணியில்’ பங்கேற்று உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்திய ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும், நான் தலைவணங்கி என்னுடைய வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்ப்பாட்டம் , பேரணி, கண்டனக்கூட்டங்கள் என்பதோடு நாங்கள் நிறுத்திக் கொள்ளமாட்டோம்” என்றும் அவர் கூறினார்.இந்தக் கொடிய சட்டத்தை மத்திய அரசுதிரும்பப் பெறவில்லை என்றால், மீண்டும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி, அடுத்த கட்டப் போராட்டம் குறித்து, கட்சிகளுக்கு, அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் அழைத்து, அரவணைத்து இந்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்றும் மு.க. ஸ்டாலின்எச்சரிக்கை விடுத்தார்.இந்த பேரணியை நடத்தவிடாமல் தடுத்துவிட வேண்டும் என்று ஆளும் கட்சி நீதிமன்றத்திற்கே சென்றது. ஆனால் அந்த சதியை முறியடித்து நீதிமன்றமே நம்முடைய போராட்டத்திற்கு தடை இல்லை என அறிவித்தது. ஆளுங்கட்சியும் நமக்கு விளம்பரம் தேடித் தருவதற்காக துணை நின்றுள்ளது. எனவே அவர்களுக்கும், இந்த போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினரும் பங்கேற்று தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள், அவர்களுக்கும் நன்றி என்றும் ஸ்டாலின் கூறினார்.