tamilnadu

img

பள்ளிகளுக்கு ஒன்றிய அரசின் சான்றிதழ் கட்டாயம்...

சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள், ஒன்றிய அரசின் சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அந்த அறிக்கையில், மாநிலத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும், மத்திய அரசின் ஃபிட் இன்டியாமூவ்மென்ட் ( Fit India Movement) சான்று கட்டாயம் என்றும் இதுவரை மிகக்குறைந்தஅளவிலான பள்ளிகளே சான்றுக்காக பதிவு செய்துள்ளதாகவும் வரும் 20ஆம் தேதிக்குள் பதிவு செய்து, அனைத்துபள்ளிகளும் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட் டுள்ளது.