tamilnadu

img

கொரோனாவுக்கு “யுனானி” மருத்துவம்: அரசு அங்கீகரிக்க கோரிக்கை

சென்னை:
யுனானி மருத்துவ சிகிச்சையைக் கொண்டு அனைத்து தரப்பு வியாதிகளையும் குணப்படுத்துவதை போலவே கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் சிகிச்சை அளித்து மிக விரைவில் கட்டுப்படுத்த முடியும் என யுனானி மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இத்தகைய மருத்துவர்களின் மகத்தான பணியை நாம் பயன்படுத் திக் கொள்ள வேண்டுமென காஞ்சிபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் காஞ்சி  அ. அயுப்கான் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.சென்னை பெரியமேடு பகுதியை சேர்ந்த இளங்கலை மற்றும் அறுவை சிகிச்சை நிபுணரும் மருத்துவருமான முஹம்மது தாவூத் இதற்கான சிகிச்சையை அளித்து வருவதாக அவர்கூறியுள்ளார் . சித்த மருத்துவத் துறை மருத்துவர்களுக்கு கோவிட்-19 வார்டு ஒதுக்கி மருத்துவம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ள தைப்போல் யுனானி மருத்துவர்களுக்கும் அனுமதி வழங்கி கோவிட் -19 வார்டுகளை ஒதுக்கி கொடுத்தால் பொது மக்களுக்கு நன்மை பயக்கும்.

ஆகவே, தமிழக அரசு இத்தகைய யுனானி முறையிலான மருத்துவத்தை அங்கீகரித்து அதற்காக  கோவிட்-19 வார்டுகள் கொடுத்து பொதுமக்கள் பயன் பெற வழிவகை செய்ய வேண்டும்..இது குறித்து ஆயுஷ் இயக்குநர் கணேஷ், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி. பிரகாஷ் ஆகியோருக்கு யுனானி மருத்துவர் முஹம்மது தாவூத் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த கடிதத்தில்,” கொரானா வார்டை ஒதுக்கிக் கொடுத்து தனது மருத்துவ சேவையினை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.