உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இன்று பதவியேற்றார்.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி கடந்த மே 7, 2021-ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஆளுநர் மாளிகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.