உ.செல்லூர் கிராமத்தில் வாலிபர் சங்கம் 29 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா
கள்ளக்குறிச்சி, ஜன.18- உளுந்தூர்பேட்டை அடுத்த உ.செல்லூர் கிராமத்தில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் 29 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு மற்றும் கருத்தரங்கம் (ஜன 17)சனிக்கிழமை நடை பெற்றது. உ.செல்லூர் கிராமத்தில் பகத்சிங் திடலில் வாலி பர் சங்கத்தின் 29 ஆம் ஆண்டு பொங்கல் விளை யாட்டு மற்றும் கருத்த ரங்கம் - கலைத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கபடி, ஓட்டப்பந்த யம், சாக்குப்போட்டி, கோ -கோ, கபடி போட்டி என்ன பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. வாலிபர் சங்க கிளைச் செயலாளர் வி.வினோத் குமார் தலைமையில் நடைபெற்றது. கிளைத் தலைவர் இ.திவாகர் வர வேற்புரையாற்றினார். முன்னதாக விளையாட்டுப் போட்டிகளை வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் கே.சக்கரவர்த்தி, ஒன்றிய துணைத் தலைவர் எம்.வீரன்ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் வாலிபர் சங்க முன்னாள் மாநில தலைவர் எம்.செந்தில், சிபிஎம் மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய் சங்கர்,வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மு.சிவகுமார்,வழக்கறிஞர் வி.சுரேஷ்,ஜெராக்ஸ் கடை உரிமையாளர் கே.ரங்க நாதன், வரு வாய்த்துறை எஸ்.வெற்றிவேல், சிபிஎம் ஒன்றிய செயலாளருக்கு ஆனந்தராஜ் மாவட்டக் குழு உறுப்பினர் டி.எஸ் மோகன்,ஆகியோர் பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு களை வழங்கி பாராட்டினர்.
