tamilnadu

img

விமானத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தல்- இருவர் கைது

கோவை, டிச.28- சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் நூதன  முறையில் அட்டைக்குள் மறைத்து வைத்து கடத்தி வரப் பட்ட ஆயிரத்து 420 கிராம் தங்க தகடுகளை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமா னத்தில், இரண்டு பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல்  கிடைத்தது. இதன் பேரில் அவ்விமானத்தில் வந்த பயணி களிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது மும்பையை சேர்ந்த ஜுனட் யூசப் சாஜித் மற்றும்  ஆசிம்சாஜித் குரேஷி ஆகியோரின்  உடமைகளை சோதித்த போது, சேலையை மடித்து வைக்க பயன்படும்  அட்டைக்குள் நூதன முறையில் தங்க தகடுகளை  மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து ஆயிரத்து 420 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 56 லட்சத்து 94  ஆயிரம் ரூபாய் ஆகும். இதைத்தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு பின்னர் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.