tamilnadu

img

துளசி அய்யா வாண்டையார் மறைவு.... முதல்வர்- தலைவர்கள் இரங்கல்....

சென்னை:
காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும், காமராஜரின் நெருங்கிய நண்பருமான தஞ்சை துளசி அய்யா வாண்டையார் முதுமை காரணமாக சென்னையில் திங்களன்று காலமானார். அவருக்கு வயது 94.

காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாவட்டத் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் துளசி அய்யா வாண்டையார். இவர் பெரும் நிலச்சுவான்தார். காங்கிரஸ் கட்சியில் ஆரம்பம் முதல் உறுப்பினரான இருந்து வந்தார்.காங்கிரஸ் முன்னாள் முதல் வர் காமராஜரின் நெருங்கிய நண்பர் ஆவார். காந்தியின் தீவிர ஆதரவாளர். சமூக அக்கறையுடன், தஞ்சையில் பூண்டி புஷ்பம் கல்லூரியைத் தொடங்கி மாணவர்களுக்குக் கல்வி பெற உதவியுள்ளார்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், 1996-2001 வரை தஞ்சை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினராக வும் பொறுப்பு வகித்தவர்.மக்களவை உறுப்பினராக இருந்த காலத்தில் தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதும் பள்ளிகளில் கட்டடங்கள் கட்டுவதற்கே பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் பல பள்ளிகளுக்குப் புதிய கட்டடம் கிடைத்தது.ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இலக்கிய, ஆன்மிக நாட்டம் உடையவர். சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார். வயோதிகம் காரணமாக உடல்நலம் குன்றிய நிலையில் காலமானார்.அவரது உடல் சொந்த ஊரான பூண்டிக்குக் கொண்டு செல்லப் பட்டு அங்கு அடக்கம் செய்யப் பட உள்ளது.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் இரங்கல் அறிக்கையில், “டெல்டா மாவட்ட மக்களால் கல்வி கண் திறந்த வள்ளல்’ சுதந்திரப் போராட்ட வீரர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் துளசி அய்யா வாண்டையார் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவு டெல்டா மாவட் டத்திற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் டெல்டா மாவட்ட மக்கள் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங் கல் தெரிவித்துள்ளனர்.