tamilnadu

img

விபரீதம்: தனிநபர் மிரட்டலுக்கு பணிந்து சாலை நடுவே மின்கம்பங்கள்!

விபரீதம்: தனிநபர் மிரட்டலுக்கு பணிந்து சாலை நடுவே மின்கம்பங்கள்!

ராணிப்பேட்டை, ஜன. 3 – நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட துறையூர் ஊராட்சி காலனி பகுதி யில், மின்வாரிய விதிகளுக்கு புறம்பாக சாலையின் நடுவே மின்கம்பங்கள் நடப் பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இப்பகுதியில் புதிய மின்கம்பங்கள் நடும் பணி சமீபத்தில் நடைபெற்றது. வழக்க மாகச் சாலையின் ஓரத்தில் நடப்பட வேண்டிய கம்பங்கள் விசித்திரமாக பாதை யின் நடுப்பகுதியில் நடப்பட்டுள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் ஒருவர் விடுத்த மிரட்டலுக்கு பணிந்து மின்வாரிய ஊழி யர்கள் விதிகளுக்கு புறம்பாக அவசர அவசரமாக இப்பணியைச் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.  குறுகிய பாதையின் நடுவே கம்பங்கள் இருந்தால் அவசர கால வாகனங்கள் செல்ல முடியாமல் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. தனிநபர் அழுத்தத்திற்காக பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாகியுள்ள அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனடியாக மின்கம்பங்களை சாலையோரம் மாற்றியமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.