திருநெல்வேலி, ஜன.3- மணிமுத்தாறு அணை யில் வனத்துறை சார்பில், சுற்றுலாப் படகு சவாரி புத்தாண்டு முதல் தொடங்கி யது. அம்பாசமுத்திரம் வனச் சரகம் சார்பில் மணிமுத்தாறு அணைப் பகுதியில் சுற்று லாப் பயணிகளுக்காக ஓய் வுப் பூங்கா, அணையில் படகு சவாரி உள்ளிட்ட வற்றுக்கு ஏற்பாடு செய்யப் பட்டு வந்தது. இதற்காக வனத் துறை சார்பில் ரூ. 80 லட்சம் மதிப்பில் சூரிய மின்சக்தியில் இயங்கும் படகு வாங் கப்பட்டது.இந்நிலையில், படகின் சோதனை ஓட்டம் அம்பா சமுத்திரம் புலிகள் காப்பக துணை இயக்குநா் ஓம் காரம் கொம்மு உத்தர வின் பேரில் புதன்கிழமை (ஜன. 1) நடைபெற்றது சோதனை ஓட்டம் வெற்றி யடைந்ததையடுத்து சுற்று லாப் பயணிகளுக் கான சேவை புதன்கிழமையே தொடங்கியது. அருவிக்கு சுற்றுலா வந்திருந்தோர், குழந்தைகள், குடும்பத்தின ருடன் சவாரி செய்து மகிழ்ந்த னர். படகு சவாரிக்கு கட்ட ணமாக பெரியவர்களுக்கு ரூ. 110-ம், 12 வயது வரை யிலானோருக்கு ரூ.55-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை படகு இயக்கப்படும் என வனத் துறை அதிகாரி கள் தெரிவித்தனர்.