tamilnadu

img

பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் திறப்பு

சென்னை,அக்.30- பாசனத்துக்காக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளை திறக்க  முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை மாவட்டம்  பாபநாசம், சேர்வலாறு மற்றும்  மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களி லிருந்து 30, 31 ஆம் தேதி வரை  154 நாட்களுக்கு 13725.92 மில்லி யன் கன அடி தண்ணீரை திறந்துவிட  முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  இதன் மூலம் தாமிரபரணி ஆற்றின் கீழ்வடக்கு கோடை மேல ழகியான் கால்வாய், தெற்கு கோடை  மேலழகியான் கால்வாய், நதி யுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங் கால்வாய் மற்றும் திரு நெல்வேலி கால்வாய், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்  கால் கால்வாய், மருதூர் கீழக்கால்  கால்வாய், தெற்கு பிரதானக் கால்  வாய் மற்றும் வடக்கு பிரதானக் கால்வாய் ஆகிய கால்வாய்களின் கீழ் உள்ள நேரடி மற்றும் மறை முக பாசன பரப்புகள் பருவ சாகு படிக்கு பயன்பெறும்.