tamilnadu

img

இன்று மொழிப்போர் தியாகிகள் தினம்!

தமிழ்மொழியின் உரிமைகளை காக்க உயிர்தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று (ஜனவரி 25) அனுசரிக்கப்படுகிறது.
1965ஆம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் நடந்த போராட்டங்களில் பலர் உயிரிழந்தனர். இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ்மொழி நிர்வாகம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களின்  நினைவாக இன்று பல இடங்களில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்று, அவர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
தமிழ்மொழி இன்று மாநில ஆட்சிமொழியாக இருப்பதற்கு காரணமான அந்தத் தியாகிகளை நினைவுகூரும் நாளாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.