சென்னை, ஜூலை 13- தமிழக அமைச்சரவை கூட்டத்தில் கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க முடிவு எடுக்க வேண்டும். அரசு வழிகாட்டு தல்படி சந்தை வியாபாரிகள் செயல்பட தயா ராக இருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்ரம ராஜா கூறினார். கொரானா தொற்று பரவலால் மூடப்பட்ட கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க அனுமதிக்க கோரி தலைமைச் செயல கத்தில் உள்ள முதலமைச்சர், துணை முதல மைச்சர் அலுவலகத்தில் ஏ.எம்.விக்ரமராஜா மனு அளித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோயம்பேடு சந்தை மூடப் பட்டு திருமழிசை பகுதிக்கு மாற்றப்பட்டதில் இருந்து வியாபாரிகள் கடுமையான வறு மையை சந்தித்து வருவதாகவும், விரைவில் கோயம்பேடு மார்க்கெட் திறக்க வேண்டும். வாகனத்தில் மட்டுமே திருமழிசை சென்று காய்கறி வாங்க முடியும் நிலை உள்ளது. இதனால் அங்கு காய்கறிகள் அழுகி வீணா கிறது. சுகாதரமற்ற நிலையில் இருப்பதாக வும் குற்றஞ்சாட்டினார். கோயம்பேடு சந்தையில், அரசு வழிகாட்டு தலின்படி முகக்கவம் அணிந்து, தனிமனித இடைவெளியோடு வியாபாரிகள் வியாபாரம் செய்வார்கள். எனவே, ஜூலை 14 அன்று நடை பெறும் அமைச்சரவை கூட்டத்தில் அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.