ஆவடி, மார்ச் 3- ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் 8ஆவது தெருவில் உள்ள 2 வீடுகள் சாலையை ஆக்கிரமித்துள்ளதாகவும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும் ஆவடி மாநகராட்சி ஆணையரி டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதிச் செயலாளர் ஆர்.ராஜன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது: ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் 8ஆவது தெரு சுமார் 1 கி.மீ. நீளம் கொண்டது. அந்த பகுதியின் பிரதான சாலையாகவும் உள்ளது. மக்களின் வேண்டுகோளை ஏற்று தற்போது சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கி றோம். ஆனால் 30 அடி கொண்ட இந்த பிரதான சாலையில் உள்ள 2 வீடுகள் மட்டும் சுமார் 15 அடி சாலையை ஆக்கிர மித்து கட்டியுள்ளனர். இதனால் அந்த இடத்தில் மட்டும் 15 அடி சாலையாக சுருங்கியுள்ளது.எனவே ஆக்கிரமைப்பை அகற்றி 30 அடி சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.