tamilnadu

முழுப்பூசணிக்காயை இலைச்சோற்றில் மறைக்க... 1ஆம் பக்கத் தொடர்ச்சி....

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் ஸ்டாலின்மணி உள்ளிட்டோர் நேரடியாகச் சென்று புகார் அளித்தனர். சங்கராபுரம்வட்டத்தில் கோட்டையாம் பாளையம், மதியனூர், மல்லிகா,கீழ்குப்பம் வேலூர் ஆகிய கிரா மங்களில் களஆய்வு செய்து, அதன் விபரங்களை கொடுத்து விசாரிக்க வேண்டுமென்று கூறியுள்ளனர். பிறகு, ஜூன், ஜூலை மாதங்களில் இதர வட்டங்களிலும் களஆய்வு செய்து எந்தெந்த நபர்கள் பொதுமக்களிடம் பணம்பெற்றுக் கொண்டு இப்படி சேர்க்கிகிறார்கள் என்ற விபரங்களுடன் வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகளிடம்மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்,இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. கடலூர் மாவட்டம் காரரைக்காடு ஊராட்சி பிள்ளையார்மேடு கிராமத்தில் மட்டும் சுமார் 300 பேருக்கு ஆகஸ்ட் மாதம் 10ஆம்தேதி வங்கிக் கணக்கில் தலா 4000ரூபாய் வந்துள்ளது. இந்த தகவல் வெளிவந்து பரபரப்பாகியது. 13ஆம் தேதி இது குறித்து விசாரிக்க வேண்டுமென்று கடலூர்மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின்செயலாளரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளரும் அறிக்கை வெளியிட்டு அனைத்து ஏடுகளிலும் வெளிவந்துள்ளது. 

13 மாவட்டங்களில் மட்டும் சுமார் ஆறு லட்சம் பேர் மே, ஜுன்,ஜூலை மாதங்களில் சேர்க்கப் பட்டுள்ளனர். மே மாதம் 14ஆம்தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த புகார் மீதுஅரசு நடவடிக்கை எடுத்திருந் தால் இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் பல மாவட்டங்களில் மோசடி நடந்திருப்பதைதடுத்திருக்க முடியும். ஆனால் அரசு அலட்சியத்தோடும்,மெத்தனமாகவும் நடந்துகொண்டது. அதற்கு காரணம் அப்பாவி மக்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு முறைகேடாக திட்டத்தில் சேர்த்தவர்கள் அதிமுக மற்றும் பிஜேபியை சேர்ந்த உள்ளூர் பிரமுகர்கள் தான். டுத்து வரும் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, அரசுப்பணம் நாங்கள் தான் பெற்றுக் கொடுத்தோம். எனவே, எங்களுக்கே வாக்களிக்க வேண்டுமென்று மக்களை வளைக்கும் நோக்கத்துடனும், பணம் பார்க்கும்நோக்கத்துடனும் தான் அவர்கள்செயல்பட்டுள்ளனர் என்பதை முதலமைச்சரால் மறுக்க முடியுமா? அதனால்தான் அத்தகைய புரோக்கர்கள் மீது இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்த அதிகாரிகள் முறைகேட்டிற்கும், ஊழலுக்கும் காரணமாக இருந்தார்களோ அந்த அதிகாரிகளே இது குறித்து விசாரிப்பார்கள் என்று முதலில் அரசு அறிவித்தது. இது கண்துடைப்பு விசாரணை, மோசடிக்கு துணை போனஅதிகாரிகளை பாதுகாக்கும்  நடவடிக்கை என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிக்கை வெளியிட்டதுடன், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று கோரினோம். ஆனால், முதல்வர் மௌனம் காத்தார். பிறகு சிபிசிஐடி விசாரணைக்கு உத்திரவிட வேண்டியதன் அவசியம் குறித்து வேளாண்மை துறை செயலாளரிடமும் தொலைப்பேசி வாயிலாக வலியுறுத்தினேன். பிறகு ஆகஸ்ட் 28ஆம்தேதி முதலமைச்சர், வேளாண்மை துறைச்செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் ஆகியோருக்கு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மெயில் அனுப்பப்பட்டது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி செப்டம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இத்துணை வலியுறுத்தல் களுக்குப் பிறகே செப்டம்பர் 2ஆம் தேதி சிபிசிஐடி வழக்கு பதிவு செய்தது என்பதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். 

தற்போது அரசு செய்ய வேண்டியது, அனைத்து மாவட்டங்களிலும்இந்த மோசடிநடைபெற்றுள்ளது. எனவே, சிபிசிஐடி விசாரணைமாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படவேண் டும். பொதுமக்களிடம் ஏமாற்றி பணம் பறித்த புரோக்கர்கள் அனைவர் மீதும் வழக்குப் பதிவுசெய்து கைது செய்ய வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற தகுதிபெற்ற விவசாயிகள் யாரும் பாதிக்கப்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியான விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவதை அரசு உத்தரவாதப் படுத்த வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் வகையில் அரசின் அணுகுமுறை இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்துகிறோம்.