tamilnadu

img

பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்களைக் கட்டுப்படுத்த சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்துக.. சிபிஎம்

சென்னை:
பெண்கள், குழந்தைகள் மீதானகுற்றங்களைக் கட்டுப்படுத்த  சட்டமன்றத்தின்சிறப்பு அமர்வை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்களுக்குத் தண்டனையைக் கடுமையாக்கும் விதத்தில்  மத்திய அரசின் ஒப்புதல் பெற்று, சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்போவதாக முதலமைச்சருடைய  அறிவிப்புபுதனன்று சட்டமன்றத்தில் வெளியிடப் பட்டுள்ளது. மாநில  குற்றப் பதிவு ஆணையத்தின் 2019-க்கான புள்ளி விவரங்கள்,  சிலகுறிப்பிட்ட பிரிவுகளில் பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டுகின்றன. ஏற்கனவே 2020 ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை
யில் நடந்துள்ள குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவு குற்றங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக முதலமைச்சருக்கு ஒரு கடிதமும் எழுதப்பட்டி ருக்கிறது. இந்தப் பின்னணியில் பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு கீழ்க்கண்ட ஆலோசனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்:1) சட்டமன்ற கூட்டத்தின் ஒரு சிறப்பு அமர்வை நடத்தி பெண்கள், குழந்தைகள்மீதான குற்றங்களைக் கட்டுப்படுத்து

தொடர்ச்சி 3ம் பக்கம்....