tamilnadu

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 : இளைஞர்கள் முற்றுகை

சென்னை:
தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப்2 ஏ தேர்வு முறை மற்றும்பாடத்திட்டத்தில் கொண்டுவந்த மாற்றங்களை கண்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குதொடரப்பட்டது. அதையடுத்து, முதன்மை தேர்வில் மொழிப் பெயர்ப்பு தேர்ச்சி கட்டாயம் என்றும் ஆனால் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இதனால் தமிழ்வழி பயின்ற மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிக்கல்ஏற்படும் என்று அச்சம் தெரிவித்துள்ள இளைஞர்கள், பழைய தேர்வு முறை மற்றும் பாடத்திட்டத்தை செயல்படுத்தக் கோரி டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.