tamilnadu

img

பி.எச்.டி மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கிட வேண்டும்! - பெ.சண்முகம் வலியுறுத்தல்

முனைவர் பட்ட (PhD ) மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கிட அரசு முன்வர வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 25.11.25 அன்று  முதலமைச்சருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தோம். நேற்று மாநிலம் முழுவதும் இம்மாணவர்களுக்கு மடிக்கணினி அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இது மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க பயன்படும். அரசுக்கு பாராட்டுக்கள். முனைவர் பட்ட (PhD) மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கிட அரசு முன்வர வேண்டும் என வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.