சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவையில் வாழ்த்து தெரிவித்தார்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த 2024 ஜூன் 5-ஆம் தேதி சென்ற சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலனில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறால் அங்கேயே தங்க நேரிட்டது. அவர்கள் பூமிக்குத் திரும்புவது சிக்கலாக மாறியது. இந்நிலையில், 9 மாதங்களுக்கு பிறகு, ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 டிராகன் விண்கலன் உதவியுடன் இந்திய நேரப்படி இன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் அவர்கள் பூமியை வந்தடைந்தனர்.
இந்த நிலையில், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவையில் வாழ்த்து தெரிவித்தார்.
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வந்தடைந்த செய்தி நம் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.