இ.எம்.எஸ் உருவப்படத்திற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அஞ்சலி செலுத்தினார்.
மார்க்சிய பேரறிஞர், சுதந்திரப் போராட்ட வீரர், கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவர் தோழர் இ.எம்.எஸ் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டக்குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இ.எம்.எஸ் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.