சென்னை,மார்ச்.19- சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
12 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் புதனன்று (மார்ச் 19) சென்னையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனை ஒட்டி சிஐடியு தலைமையிலான அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினர் அண்ணாசாலை தாராப்பூர் டவர் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.