tamilnadu

img

சிங்கப்பூர் போல சென்னை மாற ஆயிரம் ஆண்டுகளாகும் : நீதிபதிகள்

சென்னை:
சிங்கப்பூரை போல சென்னை மாற ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்றும் ஆனால் அப்போது 10 ஆயிரம் ஆண்டுகள் சிங்கப்பூர் முன்னோக்கிச் சென்றுவிடும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.நெல்லை ஜெபமணி ஜனதாகட்சியின் பொதுச்செயலாளரும், ராஜீவ் காந்தி கொலை வழக்கின் சி.பி.ஐ. விசாரணையில் இடம் பெற்றிருந்த ஓய்வுபெற்ற காவல்துறை ஆய்வாளருமான மோகன்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தார்.இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே மோசமான சாலைகளை கண்டறியவும், மழை நீர் வடிகால் கட்டமைப்பை ஆராயவும் இரண்டு வெவ்வேறு வழக்கறிஞர்களை ஆணையர்களாக நியமித்துள்ளதாக அரசு தெரிவித்தது. மேலும் 2015ல் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பு மீண்டும் ஏற்படாது என சென்னை மாநகராட்சிஉறுதி அளித்தது.இதனையடுத்து 80 சதவீத மழை நீர்வடிகால் அமைக்கப்பட்டு விட்டது என்பது குறித்த தகவலை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், மோகன்ராஜ் வழக்குடன், மழை நீர் வடிகால்பராமரிப்பு வழக்கையும், சாலை பராமரிப்பு வழக்கையும் சேர்த்து விசாரிக்கவும் முடிவு செய்தனர்.

சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகள் மோசமான நிலையிலேயே பராமரிக்கப்படுவது குறித்தும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். தற்போதைய பருவமழை காலம் முடியும் வரை சாலைகள் செப்பனிடப் போவதில்லை என்றும் இதேநிலையில் போனால் தற்போதைய சிங்கப் பூரை போல சென்னை மாற 1,000 ஆண்டுகள் ஆகும். ஆனால் அப்போது 10,000 ஆண்டுகள் சிங்கப்பூர் முன்னோக்கிச் சென்றுவிடும் என தெரிவித்தனர்.