tamilnadu

img

திருவள்ளூர் இளைஞர் ஏகேஷ் குடும்பத்திற்கு ரூ. 10லட்சம் நிவாரணம் சிபிஎம் வரவேற்பு

சென்னை, ஜன. 9 - திருவள்ளூர் மாவட்டத்தில் கடத்தப்பட்ட ஒரு பெண்ணை காப்பாற்ற முனைந்து உயிரிழந்த வீர இளைஞர் ஏகேஷின் குடும் பத்திற்கு, தமிழக அரசு நிவாரணம்  அறிவித்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தி வருமாறு: திருவள்ளூர் மாவட்டத்தில் மப்பேடு என்கிற பகுதியில் 26.12.2019 அன்று மாரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஷேர் ஆட்டோவில் கடத்தப்பட்டார். அப்பெண்ணின் அலறல் குரல் கேட்டு அவரை காப்பாற்றச் சென்ற ஏகேஷை ஆட்டோ டிரைவர் அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதி படுகாயம் ஏற்படுத்தியதில் அவர் உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞர் ஏகேஷ் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டுமெனவும், ஏகேசுடன் சென்ற இளைஞர்களை தமிழக அரசு பாராட்டி கௌரவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி 31.12.2019 அன்று தமிழக முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அனுப்பப்பட்டது. அந்த மனுவில், “ஷேர் ஆட்டோவில் சென்ற பெண், அந்த வாகனம் வேறு பாதையில் சென்றதால் அதிர்ச்சி அடைந்து ஆட்டோவை நிறுத்துமாறு கூறிய போதும் நிறுத்தாமல் சென்றதால் உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார். அந்தக் குரல் கேட்டு, சாலை ஓரமாக நின்றிருந்த இளைஞர்கள் சிலர், அப்பெண்ணை காப்பாற் றும் பொருட்டு ஷேர் ஆட்டோவை துரத்திச் சென்றுள்ளனர். இந்நிலை யில் அந்தப் பெண், ஆட்டோவி லிருந்து குதித்துவிட்டார். எனினும் கடத்திச் சென்ற ஓட்டுநரை இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் பின்னால் துரத்திச் சென்றுள்ளனர். அப்போது ஆட்டோ ஓட்டுநர் கேசவன், இரு சக்கர வாகனத்தில் துரத்திச் சென்ற ஏகேஷ் மீது ஆட்டோவை மோதி படுகாயப்படுத்திவிட்டு தப்பித்த நிலையில், ஏகேஷ் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளார்” என்று  விவரிக்கப்பட்டிருந்தது.  மேலும், தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தன் உயிரை துச்சமென மதித்து ஒரு பெண்ணைக் காப்பாற்ற முயன்ற இளை ஞர்களின் சமூக அக்கறையை நாம் அனை வரும் பாராட்ட வேண்டும் என்றும் அந்த மனுவில் மார்க்சிஸ்ட் கட்சி கூறியிருந்தது.  இதையொட்டி வியாழனன்று (9.1.2019) சட்டசபையில் விவாதத்தின் போது பேசிய முதலமைச்சர், உயிரிழந்த இளைஞர் ஏகேஷின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி யுதவியும், அவருடன் சென்று விபத்தில் காய மடைந்த இளைஞருக்கு ரூ.2 லட்சம் நிவா ரணமும், இந்த சம்பவத்தில் கடத்தல்காரர் களைப் பிடிக்க முயன்ற மேலும் 3 இளைஞர் களுக்கு அவர்களது தீரத்தைப் பாராட்டி தலா ரூ.25 ஆயிரம் நிதி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வர வேற்கத்தக்கது. உயிரிழந்த ஏகேஷ் குடும் பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். எனவே குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடவும் முதலமைச்சரை கேட்டுக் கொள் கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். (முதல்வர் அறிவிப்பு பக்கம் : 5)