கச்சா எண்ணெய்யுடன் மூன்றாவது கப்பல் இந்தியா வந்தது! அகமதாபாத்,மார்ச் 18 - ஐக்கிய அரபு அமீரகத்தி லிருந்து சுமார் 80,886 மெட் ரிக் டன் கச்சா எண்ணெ ய்யை ஏற்றி வந்த ‘ஜக் லாட்கி’ கப்பல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந் துள்ளது. ஏற்கெனவே வந்த, சிவா லிக், நந்தாதேவி ஆகிய இரண்டு கப்பல்களைத் தொடர்ந்து, மூன்றாவதாக, ஜக் லாட்கி கப்பல் வந்த டைந்துள்ளது. ஈரான் மீது, அமெரிக்கா வும் இஸ்ரேலும் நடத்தி வரும் யுத்தத்தால், உலக ளவில் கச்சா எண்ணெய்ப் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. இதனால், 28 இந்திய சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரி ணையை கடந்து வர முடி யாமல் சிக்கிக் கொண்டன. இதனிடையே, அமெரிக்கா - இஸ்ரேலைத் தவிர்த்து, தங்களின் நட்பு நாடுகளைச் சேர்ந்த சரக்குக் கப்பல்கள், முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு, ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்லலாம் என்று ஈரான் அனுமதி அளித்தது. அதனடிப்படையில், இந்தியாவுக்கான சரக்குக் கப்பல்கள் ஒவ்வொன்றாக வரத் துவங்கியுள்ளன.