சென்னை:
நீதிமன்றத்தை விமர்சித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை என தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் நடிகர் சூர்யா, கொரோனா தொற்று காரணமாக உயிருக்கு பயந்து காணொலியின் மூலம் வழக்கு விசாரணை நடத்தும் நீதிமன்றம் மாணவர் களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத உத்தரவிட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.நடிகர் சூர்யாவின் இந்த கருத்து நீதிமன்றத்தின் மாண் புக்கு களங்கம் ஏற்படுத்துவதாக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். எம்.சுப்பிரமணியம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 13ஆம் தேதி தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த கடிதத்தில், நடிகர் சூர்யா பேசியது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில் வருமா என்பதை ஆய்வு செய்ய அரசு தலைமை வழக்கறிஞருக்கு இந்த விவகாரத்தை தலைமை நீதிபதி அனுப்பி வைத்தார்.இதை பரிசீலித்த அரசு தலைமை வழக்கறிஞர், நடிகர் சூர்யா மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க தேவையில்லை என தெரிவித்திருந்தார்.அதன் அடிப்படையில் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு தேவையில்லை என தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.அந்த உத்தரவில், கொரோனா தொற்று பரவும் நேரத்தில் கூட நீதிமன்றங்கள் காணொலி மூலமாகவும், நேரடியாகவும் செயல்பட்டு 42 ஆயிரத்து 233 வழக்குகளை முடித்து வைக்கப்பட்டுள்ளது.கொரோனா காலத்திலும் நீதிமன்றங்கள் எப்படி செயல்பட்டுள் ளது என்பது குறித்து நடிகர் சூர்யா முழுமையாக அறிந்து கொள்ளாமல் விமர்சித்தது தேவையற்றது என தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பொது விவகாரங்கள் குறித்து தனி நபர் கருத்து தெரிவிக்கும் போது, குறிப்பாக நீதிமன்றங்கள், நீதிபதிகள் மற்றும் அவர்களின் பணிகளை விமர்சிக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.நியாயமான விமர்சனங்கள் நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்றாலும் கொரோனா காலத்தில் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளாமல் நடிகர் சூர்யாவின் விமர்சனம் என்பது அவசியமில்லாத ஒன்று எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.